உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா?
இன்று தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்களுக்கான முகாம்கள் நடக்கின்றன. உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றால் அதைச் சேர்த்துக் கொள்ள இது உரிய தருணம்.
1.முதலில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா எனத் தெரிந்து கொள்ளுங்கள். அதை இணையம் மூலமேகூட நீங்கள் தெரிந்து கொள்ளலாம். http:// www.elections.tn.gov.in/ searchid.htm என்ற இணைய முகவரிக்குச் சென்று உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண்ணைக் கொண்டோ, (அடையாள அட்டை இருந்தால்) முகவரியைக் கொண்டோ, வாக்குச் சாவடியைக் கொண்டோ தேடலாம். தமிழிலும் தேடலாம் ( என் அனுபவத்தில் வாக்காளர் அடையாள அட்டையை வைத்துத் தேடுவதைவிட முகவரியைக் கொண்டு தேடுவது எளிதாக இருந்தது) உங்கள் பெயர் இருந்தால் அதை ஒரு பிரிண்ட் அவட் எடுத்து வைத்துக் கொண்டால் பூத் ஸ்லிப் இல்லாமலேயே அதைக் காட்டி வாக்களிக்க எளிதாக இருக்கும்.
பெயர் இல்லாவிட்டால்?
முகாமிற்கு சென்று பெயரைச் சேர்த்துக் கொள்ளலாம். முகாம்கள் எங்கே நடக்கின்றன என்பதை உங்கள் மாநகராட்சி/நகராட்சி /ஊராட்சி அலுவலகங்களில் கேட்டால் தெரியும். சென்னையில் எங்கள் பகுதியில் ஆட்டோக்கள் இரண்டு நாள்களாக அலறிக் கொண்டு அலைகின்றன. அல்லது நீங்கள் இணையம் மூலமாகவும் பெயரைப் பதிந்து கொள்ளலாம். அதற்கான இணைய முகவரி: http:// www.elections.tn.gov.in/ eregistration/
இப்போது கோட்டை விட்டுவிட்டு அப்புறம் விசைப்பலகை வீரர்களாக இங்கே போர்க்குரல் எழுப்புவது/புலம்பவதில் அர்த்தம் இல்லை
விதைக்க வேண்டிய நாளில் வீட்டில் தூங்கிவிட்டு அறுவடை நாளில் அறுவாளை எடுத்துக் கொண்டு போவதில் பயனில்லை-பழமொழி
Thanks... https://www.facebook.com/maalannarayanan?hc_location=stream
இன்று தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்களுக்கான முகாம்கள் நடக்கின்றன. உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றால் அதைச் சேர்த்துக் கொள்ள இது உரிய தருணம்.
1.முதலில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா எனத் தெரிந்து கொள்ளுங்கள். அதை இணையம் மூலமேகூட நீங்கள் தெரிந்து கொள்ளலாம். http://
பெயர் இல்லாவிட்டால்?
முகாமிற்கு சென்று பெயரைச் சேர்த்துக் கொள்ளலாம். முகாம்கள் எங்கே நடக்கின்றன என்பதை உங்கள் மாநகராட்சி/நகராட்சி /ஊராட்சி அலுவலகங்களில் கேட்டால் தெரியும். சென்னையில் எங்கள் பகுதியில் ஆட்டோக்கள் இரண்டு நாள்களாக அலறிக் கொண்டு அலைகின்றன. அல்லது நீங்கள் இணையம் மூலமாகவும் பெயரைப் பதிந்து கொள்ளலாம். அதற்கான இணைய முகவரி: http://
இப்போது கோட்டை விட்டுவிட்டு அப்புறம் விசைப்பலகை வீரர்களாக இங்கே போர்க்குரல் எழுப்புவது/புலம்பவதில் அர்த்தம் இல்லை
விதைக்க வேண்டிய நாளில் வீட்டில் தூங்கிவிட்டு அறுவடை நாளில் அறுவாளை எடுத்துக் கொண்டு போவதில் பயனில்லை-பழமொழி
Thanks... https://www.facebook.com/maalannarayanan?hc_location=stream
0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:
Post a Comment
தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன