tet books

time


follow me on fb

Saturday, June 29, 2013

TNTET -நுழைவுச்சீட்டுகளை இந்த முறை இணையத்திலிருந்தே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

TET Hall Ticket only by Online| ஆசிரியர் தகுதித் தேர்வு "ஹால் டிக்கெட்' இணையதளத்திலிருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும் ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள டி.இ.டி., தேர்வுக்கு, இதுவரை, 4.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆகஸ்ட், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கின்றன

Friday, June 14, 2013

TNPSC GROUP 4 - அறிவிப்பு வெளியீடு

அறிவிப்பு நாள் - 14.06.2013
விண்ணப்பிக்க கடைசி நாள் - 15-07-2013
தேர்வு நாள் - 25-08-2013
மொத்த பணியிடங்கள் - 5566

ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்


  

Wednesday, June 12, 2013

விரைவில் வெளியாகிறது TNPSC குருப் 4 தேர்வு அறிவிப்பு - காலி பணியிடங்கள் எண்ணிக்கை 5500

அரசின் பல்வேறு துறைகளில் 5,500 காலி பணி இடங்களை நிரப்ப ஆகஸ்டு மாதம் குரூப்–4தேர்வு ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் சென்னை அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள சுமார் 5,500 காலி பணி இடங்களை நிரப்ப ஆகஸ்டு மாதம் குரூப்–4 தேர்வு நடத்தப்பட உள்ளது. 

இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும். 5,500 காலி இடங்கள் தமிழக அரசின் வெவ்வேறு துறைகளுக்கு தேவைப்படும் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்தர் மற்றும் பில் கலெக்டர், வரைவாளர், சர்வேயர் ஆகிய பதவிகள் குரூப்–4 தேர்வு மூலமாக நியமிக்கப்படுகின்றன.

 இந்த தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்துகிறது. இதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10–ம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குரூப்–4 தேர்வு மூலமாக 10 ஆயிரத்திற்கும்மேற்பட்ட பணி இடங்கள் நிரப்பப்படன. இந்த நிலையில், மேற்கூறப்பட்ட பதவிகளில் சுமார் 5,500 காலி இடங்கள் குரூப்–4 தேர்வு மூலமாக நிரப்பப்பட இருக்கின்றன. ஆகஸ்டு மாதம் தேர்வு இதற்கான எழுத்துத்தேர்வு ஆகஸ்டு மாத இறுதியில் நடத்தப்பட உள்ளது. 

Saturday, June 8, 2013

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 12 லட்சம் விண்ணப்பங்கள் தயார்:

அனைத்து அரசு மேல்நிலைபள்ளிகளிலும் 17–ந்தேதி முதல் கிடைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 12 லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டு விற்பனை மையங்களுக்கு நாளை ( திங்கட்கிழமை ) முதல் அனுப்பி வைக்கப்படுகின்றன .

 விண்ணப்பங்கள் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் 17– ந்தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் .

ஆசிரியர் தகுதித்தேர்வு மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் 8– ம் வகுப்பு ரையுள்ள ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது .

 அதன்படி , 23.8.2010 முதல் இடைநிலை , பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு தமிழக அரசு , தகுதித்தேர்வை கட்டாயமாக்கி உள்ளது .

 கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் 6½ லட்சம் ஆசிரியர்கள் எழுதினர் . மொத்தம் 150 மதிப்பெண் கொண்ட தகுதித்தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் அதாவது 90 மார்க் எடுத்தால் தேர்ச்சி பெற்றவர் ஆவார்கள் . தகுதித்தேர்வு தேர்ச்சி 7 ஆண்டுகள் செல்லத்தக்கது ஆகும் .

12 லட்சம் விண்ணப்பங்கள் இந்த ஆண்டு தகுதித்தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் வெளியிட்டது .

அதன்படி , இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம் 17– ந்தேதியும் , பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு 18– ந்தேதியும் நடத்தப்படுகிறது .

மருத்துவ படிப்பிற்கான சீரற்ற எண் ( Random No ) வெளியீடு

add free link ... click below... feel free

http://tnhealth.org/dme/mbbsrandom2013/mbbsappl2013_2.php?action=1

Wednesday, June 5, 2013

லஞ்சத்தினை ஒழிக்க வேண்டிய கடமை - ஆசிரியர்களிடமிருந்தே தொடங்கப்பட வேண்டும்!

பல நாட்களாக சொல்ல மனம் தவித்த விடயம் இது!

நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவி கிடக்கிறது லஞ்சம்!

லஞ்சங்களின் முதன்மை இருப்பிடங்களாக இருப்பவை அரசாங்க அலுவலகங்கள்தான் என்றால் அது மிகையல்ல.

பொதுமக்களுக்காகவும்- அரசாங்க ஊழியர்களுக்காகவும் செயல்பட வேண்டிய அரசு அலுவலக ஊழியர்கள் தங்களின் பணிசுமையை காரணம் காட்டி வரம்பிற்கு மீறிய வகையில் பணத்தினை  பொதுமக்களிடமிருந்தும், அரசு ஊழியர்களிடமிருந்தும் பறிப்பதை வெளியில் சொல்ல எந்த ஒரு குடிமகனும் முன்வருவதில்லை.

காரணம்! அந்த நேரத்தில் அவனுக்கு அந்த வேலை உடனடியாக முடியவேண்டும். அவசரம், அவசரத்தில் அலுவலகத்தில் கேட்கும் பணத்தினை கொடுத்துவிட்டு தங்கள் காரியத்தினை சாதித்து கொண்ட திருப்தியில் வெளிவருகிறான் ஒவ்வொரு அரசாங்க ஊழியனும் , பொதுமக்களும்.

ஆனால், அந்த வேலையை முடிக்க அவன் அவ்வளவு தொகையை செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதை பொறுமையாக நிதானமாக உட்கார்ந்து சிந்தித்தாலே போதும்.

அதெல்லாம் ஒருபுறம் இருக்க அலுவலக நடைமுறைச் சிக்கல்கள் பலவாறாக இருக்கின்றன.

அலுவலகத்தில் பல லஞ்ச வழக்குகளில் பிடிக்கப்படுபவர்கள் எல்லாம் உயர் அதிகாரிகள் அல்ல ...மாறாக சாதாரண அடிதட்டு ஊழியர்கள் தான்.

பிறகு உயர் அதிகாரிகளுக்கும் இதற்கும் சம்மந்தம் இருக்காதா என்ன? என்ற கேள்விக்கும் விடை உண்டு.

கடைநிலை ஊழியனிடமிருந்து பல share களாக உயர் அதிகாரிகள் வரை லஞ்சம் பங்கிடப்படுவதை யாராலும் மறுக்க முடியாது.

சில அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் நல்ல ஒழுக்க சீமான்களாக இருந்தாலும் உயர் அதிகாரிக்கு கீழ் உள்ள அலுவலர்கள் வரை அனைவருக்கும் இந்த பணம் பிரித்தளிக்கப்படுகிறது என்பதுதான் கொடுமையான விடயம்.





லஞ்சம் ஏன்?

லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் அலுவலக நடைமுறை சிக்கல்களாக பல காரணங்களை முன் வைக்கலாம்.

அவை.
1. சம்பள பற்றாக்குறை
2. உயர் அதிகாரிகளின் வற்புறுத்தல்
3. அலுவலக நடைமுறை செலவுகளை சமாளிக்க
4. printer toner வாங்க
5. Print செய்ய பேப்பர் வாங்க
6. உயர் அதிகாரிகள் வந்தால் அவர்களை கவனிக்க
7. தணிக்கை அலுவலர்களை - சிக்கல் இன்றி கவனிக்க

இப்படி பலவாறான காரணங்களை என்னதான் லஞ்சம் வாங்குபவர்கள் அடுக்கினாலும் லஞ்சம் - லஞ்சம்தான்... தவறு தவறுதான்.

ஆசிரியர்களும் லஞ்சம் அளிக்கிறார்கள்!

எனக்கு தெரிந்த வரையில் சுத்தமான.. நாணயமான... நேர்மையான ... பணி என்றால் அதில் ஆசிரியர் பணியும் ஒன்று.
அத்தகைய ஆசிரியர்களிடமிருந்தே லஞ்சத்தினை பார்க்கும் அலுவலகங்கள் இருக்கதான் செய்கின்றன.

அலுவலக ஊழியர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதை விட ... ஆசிரியர்கள் லஞ்சம் அளிக்கிறார்கள் என்பதைதான் நான் இங்கு அழுத்தம் திருத்தமாக கூற கடமைபட்டிருக்கிறேன்.

இந்தியாவின் நாளைய தூண்களை வடிவமைக்கும் ஆசிரியர்கள் இப்படி ஒரு கேவலமாக செயலில் ஈடுபடுவது சாக்கடையை மேலும் அசுத்தமாக்குவதாகதான் அமையும்.

ஆசிரிர்கள் தங்களின் தேவைகளை நிறைவு செய்துகொள்ள அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. தலைமை ஆசிரியரின் மூலமாக தபாலை கொடுத்து அனுப்பினாலே போதும்.

அல்லது Register Post இல் post செய்தாலே போதும் . அதை விடுத்து அவசர கதியில் அலுவலகத்திற்கு சென்று ஆயிரம் ஆயிரமாக அலுவலக ஊழியர்களுக்கு லஞ்சம் அளித்து ஒரு பிரட்சனையான நாளைய சமூக அநீதிக்கும் அடித்தளம் அமைப்பதை ஒரு போதும் ஏற்க கூடாது.

தமிழக அரசின் சிறப்பான திட்டம்.

முன்பெல்லாம் சாதி, வருமானம், இருப்பிடம் போன்ற சான்றிதழ்களை பெற VAO ( கிராம நிர்வாக அலுவலரின் ) அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். அங்கு இருக்கும் தரகர் ஒருவர் இடையில் கொஞ்சம் பணத்தினை நம்மிடமிருந்து கரந்த பின்னரே சான்றிதழ்களை அளிக்க கையெழுத்து வாங்கி தருவார்.

பல VAO க்கள் இந்த லஞ்ச விவகாரத்தில் கையும் களவுமாக மாட்டி இருக்கிறார்கள்.

இதனை மனதில் கொண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிப்பதற்காகவும் சகாஜ் அமைப்பின் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும ‘மக்கள் கணினி மையம் ‘ எனும் அமைப்பினை நிறுவி அதன் மூலமாகவே பதிவு கட்டணம் 50 மட்டும் வாங்கப்பட்டு சான்றிதழ்களை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலமாக பெருமளவில் லஞ்சம் தாண்டவமாடும் இடத்திலேயே ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதை உணரலாம்.

 ஒரு பணிவான வேண்டுகோள்:
 இதேபோல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் தங்களுக்கான பல்வேறு சேவைகளை ஆன்லைனிலேயே பதிவு செய்யும் ஒரு திட்டத்தினை அறிமுகம் செய்வதன் மூலமாக அலுவலக லஞ்சத்தினை முற்றிலும் ஒழித்து நல்லதொரு சமூகத்தினை நிச்சயம் நிலைநாட்ட முடியும்.


பொதுமக்கள் , அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
லஞ்சத்தின் மூலமாகதான் ஒரு காரியம் சாதிக்கப்பட வேண்டும் என்ற சிக்கல் வந்தால் லஞ்ச ஒழிப்பு போலிசாரிடம் தகவல் அளித்துவிடுங்கள் மற்றதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

Telephone : 91-44-24615929 / 24615949 / 24615989 / 24954142 


லஞ்சத்தினை ஒழிப்போம்... நிம்மதியாய் வாழ்வோம்...

http://www.dinamalar.com/district_detail.asp?id=728893 

+2 உடனடித் தேர்வு - தட்கல் முறையில் விண்ணப்பிக்க இன்றும் நாளையும் காலக்கெடு

http://dge2.tn.nic.in/hsctatkal/welcome.htm

HSS தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உடனடித் தேர்விற்கான ஆன்லைனில் விண்ணப்பிக்க தவறியவர்கள்..

இன்றும் நாளையும் 06-06-2013 மற்றும் 07-06-2013 ஆகிய இரு தினங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்ப கட்டணத்துடன் ஆயிரம் ருபாய் கூடுதலாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பித்த படிவம் மற்றும் கட்டணத்தினை

http://dge2.tn.nic.in/hsctatkal/HSE%20JUNE%20JULY%202013%20THAKKAL%20INSTRUCTIONS.pdf

இதில் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த மாவட்ட இடங்களில் நேராக அளிக்க வேண்டும்


SSLC உடனடித் தேர்விற்கான காலக்கெடு அரை நாட்கள் நீடிப்பு

http://dge2.tn.nic.in/sslcprivate/

இன்று மதியம் 1 மணி வரை SSLC உடனடித் தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.   

Tuesday, June 4, 2013

SSLC உடனடி தேர்விற்கு ஆன்லைனில் விண்ணபிக்க இன்றே கடைசி நாள்.

http://www.dge.tn.nic.in/sslcprivate/welcome.htm


மே 31 ஆம் தேதி வெளியிடப்பட்ட SSLC தேர்வில் தவறிய மாணவர்கள் உடனடியாக மறுத் தேர்வினை எழுத ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான காலம் இன்றுடன்  ( 05-06-2013 ) முடிவடைகிறது.

எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் 

Monday, June 3, 2013

ஆண்/ பெண் அரசு பள்ளிகளில் - ஆசிரியர்கள் பாலின அடிப்படையில் நியமனம்.

மே 28 - GO No 145 இன் படி...

தமிழகத்தில் இனி அரசு ஆண்கள் பள்ளிகளில் - ஆண் ஆசிரியர்களும்
அரசு பெண்கள் பள்ளிகளில் - பெண் ஆசிரியர்களும் மட்டுமே பணியமர்த்தப்படுவர்.

தலைமை ஆசிரியர்கள் பெண்கள் பள்ளிகளில் பெண் தலைமை ஆசிரியராக மட்டுமே இருக்க இந்த அரசு விதியில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இருபாலாரும் படிக்கும் பள்ளிகளில் பெண் ஆசிரியர்களுக்கு முன் உரிமை அளிக்கும் படியாகவும் இந்த விதியில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான ஆசிரியர் பணியிட மாற்ற கலந்தாய்வு முடிந்துள்ளதால் அடுத்த ஆண்டு முதல் இது தீவிர அமல் படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் , இந்த TET தேர்விலும் PG TRB தேர்விலும் தேர்ச்சி அடைந்து பணியில் சேர்வோரும் இவ்விதிகளின் படியே பணியில் சேர வாய்ப்பு அளிக்கப்படும்.




other links