tet books

time


follow me on fb

Thursday, February 14, 2013

ராணுவ கல்லூரியில் படிக்க 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாய்ப்பு...

வட இந்திய மாநிலமான உத்தரகாண்டில் உள்ள டேராடூன் ராணுவ கல்லூரியில் சேர்ந்து படிக்க 7–ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுவோரின் படிப்புக்கு தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.இதுதொடர்பாக சென்னையில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இந்திய ராணுவ கல்லூரி இயங்கி வருகிறது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கல்வி நிறுவனம், ராணுவ பணிகளில் சேர மாணவர்களை தயார்படுத்துகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இங்கு சேர விண்ணப்பங்களை வரவேற்கிறது.தற்போது 7–ம் வகுப்பு படித்துக்கொண்டிருப்பவர்கள், 2014 ஜனவரியில் 7–ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த ராணுவ கல்லூரியில் சேரலாம். குறைந்தபட்ச வயது 11½ (1.1.2014–ன் படி). 13 வயது பூர்த்தி அடைந்திருக்கக்கூடாது. விண்ணப்ப கட்டணம் ரூ.400 (பதிவு தபாலில் பெற), ரூ.450 (விரைவு அஞ்சலுக்கு). எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் என்றால் பதிவு தபாலில் பெற வேண்டுமானால் ரூ.355–ம் விரைவு தபால் மூலமாக எனில் ரூ.405–ம் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

குறிப்பிட்ட விண்ணப்ப கட்டணத்தை தி கமாண்டன்ட், ஆர்.ஐ.எம்.சி. டேராடன் என்ற பெயரில் பாரத ஸ்டேட் வங்கியின் டிமாண்ட் டிராப்டாக மேற்கண்ட கல்வி நிறுவனத்தின் முகவரிக்கு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள் மார்ச் 31–ந் தேதி ஆகும்.எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வு சென்னை உள்பட மாநிலங்களின் தலைநகரங்களில் நடத்தப்படும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் சார்பில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:

Post a Comment

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links