tet books

time


follow me on fb

Sunday, April 29, 2012

TNPSC GROUP 4 EXAM

Tuesday, April 24, 2012

dhinamani TET Questions

சூன் - 3 ல் திட்டமிட்டபடி ஆசிரியர் தகுதித் தேர்வு

 ஒரு மாத காலம் வரை தள்ளி வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு திட்டமிட்டபடி சூன் 3 ஆம் தேதி நடை பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் அதற்கான செய்தி இன்றைய தினத்தந்தி நாளிதழில் வெளியாகி உள்ளது.

Monday, April 23, 2012

கொள்ளையடிக்கும் தனியார் பயிற்சி வகுப்புகள்( coaching class)...

இன்னும் 2 மாதங்கள் முழுமையாக ஆகவில்லை ஆசிரியர் தகுதித் தேர்வுகள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு அதற்க்குள் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களையும் கல்வியியல் கல்லூரிகளையும் மிஞ்சிடும் விதமாக நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காலான்களாக தனியார் பயிற்சி வகுப்புகளின் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது...

எனக்கு தினமும் எவர்ஆன் என்ற ஆன்லைன் பயிற்சி நிறுவனம் மூலம் குறுஞ்செய்தி வேறு...

 என்னதான் கற்பிப்பாங்க அங்க?

மொத்த பாடமும் நமது 1-8 ஆம் வகுப்பு பாடபுத்தகத்திற்குள் அடங்கிவிட்ட நிலையில் என்னதான் கற்பிப்பார்கள் அங்கு?

என்னவோ M.Phil , P.hd க்கு பயிற்சி பெறுவது போலவும்... I.A.S அதிகாரிகளுக்கு பயிற்சி பெறுவது போலவும் பயிற்சி நிறுவனங்களின் இத்தகைய செயற்பாட்டினை பார்க்கும் போது வேடிக்கையாகத்தான் உள்ளது.

இவற்றிற்கான கட்டணங்களை கேட்கும் போது அய்யோ என்று ஆகிவிடுகிறது... குறைந்த பட்டச கட்டணமே 3500 ருபாயாம் அய்யோ...

என்னவோ TNPSC எழுதுவதற்கு பயிற்சி பெறுவது போல் மாய்ந்து மாய்ந்து பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிப்பது பயனளிக்குமா?


அல்லது உண்மையான ஆசிரியராக பாடபுத்தகங்களை படித்துணரந்து அவற்றினை எவ்வாறு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று அனுபவம் பெற்றவர்களுக்கு இது பயனளிக்குமா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் வேலைவாய்ப்பு பயிற்சி அலுவலகம் மூலம் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் 45 நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தபடுவதாக வெளியாகி உள்ள தகவல் புதுமையானது.

என்ன செய்வது 16,000 பணிகளுக்கு 8 லட்சம் போட்டியாளர்கள் என்றால் போட்டி கடுமையாகத்தான் இருக்கும்.

தேர்வு தேதி ஒரு மாதகாலம் வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் ... B.Ed தேர்வு மே 24 நடைபெறும் என்றும் வாய்வழி செய்திகள் உளவி வருகின்றன...


என்னமோ... 150 மதிப்பெண்ணுக்கு 149 மதிப்பெண் எடுத்தால் கூட அது பணி பெறுவதனை பாதிக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மையாக இருக்க போகிறது... ஏனெனில் 8 லட்சம் பேரில் 16 ஆயிரம் பேராவது சதமடிக்கும் (முழு மதிப்பெண் எடுக்கும்) ஆசிரியர்கள் இருக்க மாட்டார்களா என்ன??? ஏன் என்றால் நாமெல்லாம் ஆசிரியர்கள் அன்றோ...


தங்களின் கருத்துகளையும்... தங்களுக்கு தெரிந்த ஆசிரியர் தகுதித்தேர்விற்கான 1 மதிப்பெண் குறிப்புகளையும் jagan.nathan801@gmail.com என்ற எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும் அவற்றினை இந்த வலைப்பூவில் பதிவேற்றம் செய்கிறேன் அவை நம்மை போன்ற நான்கு பேருக்கு உதவும் அல்லவா???

வாழ்வோம் வாழ வைப்போம்... நல்லதை நினைப்போம் நல்லதை பெறுவோம்...

psychology q.p 

Thursday, April 12, 2012

குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும்

<a http://tntet2012.blogspot.in/ </a>
1. நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவை கவனச் சிதைவு ஆகும்.
2. நம் நினைவில் என்றும் தங்கும் வகையில், லாரிகளின் பின்புறத்தில் பொதுவாக எழுதப்பட்டிருக்கும் 'ஒலி எழுப்புக' என்பதற்கு பதில்...?   -  ஒலி எனக்கு (Sound to me)
3. கவனம் - புலன் காட்சிகள் அடிப்படையாகும்.
4. கவனித்தல் நமது மன வாழ்க்கையுடன் எப்போதும் இணைந்து காணப்படுகிறது.
5. ஒருவனுடைய கற்கும்திறன் உடல் - உடல் வளர்ச்சிகள் ஒட்டியே அமைகிறது.
6. வளர்ச்சியினைக் குறிக்கும் நடத்தைகளும் செயல்களும் வளர்ச்சிசார் செயல்கள் ஹெலிகாப்டர் என்பவரால் வர்ணிக்கப்பட்டது.ரா
7.முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவனம் 7 இருக்கும்.
8.கவன மாற்றம் என்பது தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 விநாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது.
9. சில சமயங்களில் நமது கவனத்தைக் கவரும் பொருள்களின் தன்மைகளை- பொருள்கள் காரணிகள்.
10. பிராட்பென்ட் என்பவரது கோட்பாடு - தற்காலச் செய்திக் கோட்பாடுகள்.
11. ADOLESENCE என்ற ஆங்கிலச் சொல்லின் அடிப்படைப் பொருள் என்ன?  -  வளருதல்
12. ஒப்புடைமை விதி என்பது - குழுவாக எண்ணுதல்.
13. புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை?  - ஐந்து
14. மனிதனின் புலன் உறுப்புகள் - அறிவின் வாயில்கள்.
15. ''உளவியல் என்பது நனவு நிலை பற்றியது'' இதனை வலியுறுத்தியவர் - வாட்சன்
16. உளவியல் என்பது மனது பற்றியது என்று கூறியவர் - கான்ட்
17. உளவியல் என்பது ஆன்மா பற்றியது அல்ல என்று கூறியவர் - கான்ட்
18. உளவியல் என்பது மனிதனின் நடத்தை, மனித உறவு முறைகளைப் பற்றியப் படிப்பாகும் எனக் கூறியவர் - குரோ, குரோ
19. எவ்விதக் கருவியும் இன்றிப் பிறருடைய நடத்தையை அறிந்துகொள்ள உதவும் முறை - போட்டி முறை
20. நாம் கோபத்தில் இருக்கும்போது நமது முகம் சிவப்பாகிறது, இந்த நடத்தையின் தன்மைகளை அறிய உதவும் முறை - அகநோக்கு முறை.
21. இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்கு தூங்கிய குழந்தை, மற்றொன்று தூங்காத குழந்தை இவர்களின் கற்றலை ஒப்பிடுவதற்கு உதவும் முறை - கட்டுப்படுத்தப்பட்ட உற்று நோக்கல் முறை.
22. வாக்கெடுப்பு எந்த உளவியல் முறையின் ஒர் வகை - வினாவரிசை முறை.
23. பிறப்பிலிருந்து முதுமை வரைக்கும் ஒருவரது கற்றல் அனுபவங்களை விவரிப்பதுதான் கல்வி உளவியல் என்று கூறியவர்- ஏ.குரோ, சி.டி.குரோ.
24. தேர்வு அடைவுச் சோதனையில் நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை - பரிசோதனை முறை.
25. ஒரு நல்ல சமூக அமைப்புக்கான நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை - பரிசோதனை முறை.
26. புலன் பயிற்சிக் கல்வி முறையை புகுத்தியவர் - மாண்டிசோரி.
27. டோரனஸ் என்பவர் தந்துவவாதி.
28. தன் நிறைவு தேவை கொள்கையை எடுத்துரைத்தவர் - மாஸ்லோ
29. சாதனை ஊக்கக் கொள்கையை விரிவாக்கியவர் -மெக்லீலாண்ட்
30. சமூக மனவியல் வல்லுநர் - பாவ்லாவ்
31. முன்பருவக் கல்வியுடன் தொடர்பியல்லாதவர் - ஜான்டூயி
32. மாஸ்லோவின் தேவைகள் படி நிலைகளுள் முதல்படி எதைக் குறிக்கும் - அடிப்படைத் தேவைகள்.
33. மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் - ஃபிராய்டு.
34. முதன்முதலில் ஆர்வத்தின் நிலை என்னும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் - மெக்லிலாண்டு.
35. தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர் - ஏ.எஸ். நீல்
36. குழப்பமான கோட்பாடுடைய புத்தி கூர்மை என்பதைத் தெரிவித்தவர் - தார்ண்டைக்
37. சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் - டார்வின்
38. மனவெழுச்சி எழுவதற்கான காரணம் என்ன? - மனவெழுச்சி நீட்சி
39. குழந்தைப் பருவத்திலும் முன் பிள்ளைப் பருவத்திலும், மனவெழுச்சிகளில் இருமுகப் போக்குதிசை தோன்றுகிறது.

  மேலும் வினாக்களையும் விடைகளையும் காண கீழே உள்ள மேலும் காண என்னும் பொத்தானை அழுத்தவும்...

Monday, April 9, 2012

குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும்


ஆசிரியர் தகுதித் தேர்வை, ஜூன் முதல் வாரத்தில் இருந்து, கடைசி வாரத்திற்கு தள்ளி வைப்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது



ஆசிரியர் தகுதித் தேர்வை, ஜூன் முதல் வாரத்தில் இருந்து, கடைசி வாரத்திற்கு தள்ளி வைப்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ஒரே நாளில் இரு தேர்வுகளை நடத்தும்போது, தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம் என்றும், இரு தேர்வுகளையும் ஒரே நாளில் நடத்தாமல், வெவ்வேறு நாட்களில் நடத்துவது குறித்தும் ஆலோசித்து வருவதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


ஆசிரியர் தகுதித் தேர்வைஜூன் முதல் வாரத்தில் இருந்து,கடைசி வாரத்திற்கு தள்ளி வைப்பது குறித்துஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.  ஒரே நாளில் இரு தேர்வுகளை நடத்தும்போதுதேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம் என்றும், இரு தேர்வுகளையும் ஒரே நாளில் நடத்தாமல்வெவ்வேறு நாட்களில் நடத்துவது குறித்தும் ஆலோசித்து வருவதாகதுறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 டி.இ.டி.தேர்வுஜூன் 3ம் தேதி நடைபெறும் எனடி.ஆர்.பி.,அறிவித்துள்ளது. தேர்வுக்குஅனைவரும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கும் வகையில், 4ம் தேதியுடன் முடிவடைந்த காலக்கெடுவை, 12ம் தேதி வரை நீட்டிப்பு செய்துடி.ஆர்.பி.,அறிவித்துள்ளது. இதனால்தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். 20ம் தேதிக்குப் பின்,விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்கள் தெரிய வரும்.

552 வினாக்கள்..

TET PAPER 2 - science - answers

குழந்தைகள் மேம்பாடு...


Sunday, April 8, 2012

விடைகளுடன் மாதிரி வினாத்தாள் 1

சில பயனுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு வினாக்கள்

 இந்த வலைப்பூவிலிருந்து இது எடுத்தாளப்பட்டுள்ளது... இப்படிக்கு ஜெகன்...
1.மாஸ்லோவின் ஊக்குவித்தல் கோட்பாட்டில் அடித்தளமாக அமைவது - உயிர்வாழ் அடிப்படை தேவைகள்
2.கற்றலில் முன்னேற்றம் காணப்படாத நிலை - தேக்க நிலை
3.இயற்கை நமக்கு போதிக்கிறது என்று கூறியவர் - ரூஸோ
4.கல்வியின் புதிய உத்திகளை கண்டுபிடிப்பதை ஊக்குவித்து பரிசு அளிக்கும் நிறுவனம் - NCERT
5.யு.பி. என்பது - அனைவருக்கும் தொடக்க கல்வி
6. SSA என்பது - அனைவருக்கும் கல்வி இயக்கம்
7.RMSA என்பது - மத்திய இடைநிலை கல்வி இயக்கம்
8.ஆயத்த விதியைத் தோற்றுவித்தவர் - தார்ண்டைக்
9. மைத்தடம் சோதனையைப் பயன்படுத்தி அறிவது - ஆளுமையை
10.தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர் -.எஸ்.நீல்
11.மனித நேய உளவியலை அறிமுகப்படுத்தியவர் - கார்ல் ரோஜர்ஸ்
12.மனித ஆளுமையை உருவாக்குவது - மரபு மற்றும் சூழ்நிலைக்காரணிகள்
13.குமரப் பருவம் சிக்கலான அமைதியற்ற பருவம் எனக் குறிப்பிட்டவர் - ஸ்டான்லி ஹால்
14.PERSONALITY என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது - லத்தின்
15.மனிதர்களை அகமுகன் புறமுகன் என்று வகைப்படுத்தியவர் - யூங்

Monday, April 2, 2012

போட்டித் தேர்வாக மாறும் ஆசிரியர் தகுதித் தேர்வு


பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு ஒரே தேர்வுதான் நடத்தப்படும் என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி அறிவித்தார்.

சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றபோதுபாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு) பேசுகையில்ஆசிரியர் நியமனத்தில் பழைய முறையை பின்பற்ற வேண்டும். 52 வயதான ஆசிரியர்களை தேர்ந்தெடுத்தால் அவர்களுக்கு தேவையான பயிற்சி கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு பதில் அளித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி பேசியதாவது:-

ஆசிரியர்களை மாணவர்கள் கேள்வி கேட்கும் காலமாக இருக்கிறது. அதனால் ஆசிரியர்களுக்கு தகுதி மிகவும் அவசியம். தகுதியான ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காகத்தான் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டில் 5 ஆயிரத்து 451இடைநிலை ஆசிரியர்களும், 18 ஆயிரத்து 343 பட்டதாரி ஆசிரியர்களும், 2 ஆயிரத்து895 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இடைநìலை ஆசிரியர் நியமனத்தைப் பொறுத்தவரை முதலில் தகுதி தேர்வு நடத்தப்படும். அதன்பிறகு மாநில அளவிலான வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பட்டதாரி ஆசிரியர்கள்தகுதி தேர்வு என்ற ஒரே தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள். அவர்களுக்கு இரண்டு தேர்வு கிடையாது. முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனம் ஒரே தேர்வு மூலம்தான் நடைபெறும். இவ்வாறு அமைச்சர் சிவபதி பேசினார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்கள்தகுதி தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி தேர்வில் 60சதவீத மதிப்பெண் (90 மார்க்குகள்) எடுப்பவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. எனினும்இந்த தகுதி தேர்வில் ஒருவர் எவ்வளவு அதிக மதிப்பெண் எடுக்கிறாரோ அந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.

ஒருவேளை தகுதி தேர்வில் குறைந்த மதிப்பெண் கிடைத்து ஆசிரியராக முடியாவிட்டால்அடுத்த ஆண்டு நடத்தப்படும் தகுதி தேர்வில் மீண்டும் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி கனியைப் பறிக்க முடியும். இந்த ஆண்டுக்கான தகுதி தேர்வு வரும் ஜுன் மாதம் 3-ந் தேதி நடைபெற உள்ளது.

 ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஏப்ரல்12ம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் கால நீட்டிப்பு செய்துள்ளது. 


other links